ஆண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டில் ரஷ்ய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகைலோவ்கா எனும் தொலைதூர கிராமத்தில் மற்றொரு நபரையும் அவர் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான எலினா பொவேலியாய்கினா (Elena Povelyaikina) எனும் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எலினா ஒரு குத்துச்சண்டை வீராங்கனை எனவும், சிறிய தோற்றதைக் கொண்டிருந்த போதிலும் அவர் வலிமையானவர் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

எலினா பொவேலியாய்கினா செல்வந்தரான ஒரு விவசாயி ஆவார். கல்லூரியொன்றில் பட்டம் பெற்ற எலினா பின்னர் தனது தந்தை விவசாயப் பண்ணையை நடத்திச் செல்ல உதவுவதற்காக வீடு திரும்பியிருந்தார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எலினாவின் வீட்டுக்கு மதுபோதையில் வந்து, சோபாவில் படுத்திருந்த 37 வயதான நபர் ஒருவர், அங்கிருந்து செல்ல மறுத்ததையடுத்து, அந்நபரை எலினா பொவேலியாய்கினா கொலை செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய விசாரணைக்குழுவொன்று இது தொடர்பாக விடுத்த அறிக்கையில், ‘முதலில் மேற்படி நபரை இந்த யுவதி கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர், ஷவல் உபகரணமொன்றின் பிடியை எடுத்து, அந்நபரின் மீது இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியுள்ளார் இதனால் அந்நபர் உயிரிழந்தார்.

 

அதன்பின் அந்த யுவதி மேற்படி சடலத்தை வேலிக்கு அப்பால் கொண்டு சென்று வீதியில் எறிந்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பான சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு முதலில் பொலிஸார் தவறினர்.
ஆனால், மற்றொரு நபரும் கொல்லப்பட்டபோது, பொலிஸாரிடம் எலினா பொவேலியாய்கினா சிக்கினார்.

இரு மாதங்களின்பின் எலினா சிலருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது, அவரின் 57 வயதான தந்தை குறித்து ஐவன் (31) எனும் நபர் ஒருவர் மோசமாக கருத்து தெரிவித்ததால் அந்நபரை எலினா கடுமையாக தாக்கிக் கொன்றரார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐவனை எலினா தாக்கியபோது, தாக்க வேண்டாம் என நானும் எனது சகோதரியும் கோரினோம். ஆனால் தலையிடுவதற்குப் பயந்தோம். ஏனெனில், அவர் மிக வலிமையானவர்’ என சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி இரு கொலைகளையும் ஆரம்பத்தில் எலினா ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் வாக்குமூலம் அளிக்க அவர் மறுத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதல் நபர் காரில் மோதி இறந்தார் எனவும், இரண்டாவது நபர் சிறுநீரக நோயினால் இறந்தார் எனவும் எலினா கூறினார். ஆனால், தடய  வியல் பரிசோதனைகள் அவர் கூறுவதற்கு முரணாக இருந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் ரீதியான வன்முறை, காயமேற்படுத்தி மரணத்துக்கு வழிவகுத்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எலினா மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வருட இறுதியில் வழக்கு விசாரணை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்குகளில் எலினா குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு 15 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply