இந்தியாவில் நேற்று மட்டும் பல்வேறு மாநிலங்களில் 375 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 12948 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 14516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
375 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12948 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது.
55665 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 54449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
30271 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 23512 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
டெல்லியில் 53116 பேருக்கும், குஜராத்தில் 26141 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இரு மாநிலங்களிலும் உயிரிழப்பு தமிழகத்தை விட அதிக அளவில் உள்ளது. டெல்லியில் 2035 பேரும், குஜராத்தில் 1618 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.