யாழ். மிருசுவில் பகுதியில் இன்றிரவு (20) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோதே யாழிலிருந்து வந்து கொண்டிருந்த ரிப்பருடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.டிப்பர் சாரதி கொடிகாமம் பொலிஸில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply