கடலில் நீராடச் சென்ற நால்வர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வத்தளை திக்கோவிட்ட கடலில் நீராடச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்றையதினம் பிற்பகல் 3 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்றுள்ள 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், பொதுமக்கள், சுழியோடிகள் மற்றும் கடற்படையினர் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் 3 பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ள நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டு றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 14 வயதுடைய சிறுவன், 16 வயதுடைய பெண் உள்ளிட் 20 மற்றும் 30 வயதுடைய பெண்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணும் கலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நால்வரது சடலங்களும் றாகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.