பிரித்தானியாவின் Reading பூங்காவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதான இளைஞர், லிபிய பிரஜையென பிரித்தானிய பாதுகாப்பு பிரிவு சந்தேகித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்தத் தாக்குதலானது பயங்கரவாத செயல் என கருதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரித்தானிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.