கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
5 வினாடிகளில் குறித்த சாதனையை செய்து முடிக்கப்பட வேண்டும் என்றும், மூன்று முட்டைகளும் புதியனவாக இருத்தல் வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை கின்னஸ் அமைப்பு விதித்திருந்தது.
இந்த இளைஞர் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு 3 முட்டைகளையும் செங்குத்தாக அடுக்கி வைத்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், பொறுமை, பயிற்சி மற்றும் ஒருமுகத்தன்மை ஆகியவை இருந்தால் மட்டுமே இந்த சாதனை சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply