தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுல்ல  தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றும் (22) இன்றும்  (23)   குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகவில்லை.

இந்த நிலையில்,  இரு தினங்களிலும் அவர் ஆஜராகாமை   குறித்து நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன

அத்துடன் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் அம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில்  இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனையிறவில் 2000-3000 வரையான இராணுவத்தினரை ஒரே நாளில்  தான் கொலை செய்ததாக அவர் கூட்டம் ஒன்றில் கூறியது குறித்தே  அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு நேற்றும் (22) இன்றும் (23) அழைக்கப்பட்டிருந்தார்.

 

Share.
Leave A Reply