முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீனின் சகோதரர் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி இந்தியாவிற்கு தப்பியோடுவதற்கு உதவினார் என புலனாய்வு பிரிவொன்றின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் 2018 இல் இந்தியாவிற்கு படகுகள் மூலம் தப்பிச்சென்றது குறித்து புலனாய்வு தகவல்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரின் சகோதரரான பதியுதீன் முகமட் ரியாஜ் இதற்கு உதவினார் என்பதற்கான புலனாய்வு தகவல்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வெளிநாடுகளிற்குஆட்களை கடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply