சிக்கன் – 1 கிலோ
அரிசி – 1 கிலோ
எண்ணெய் – 100 கிராம்
வெங்காயம் – 500 கிராம்
தக்காளி – 500 கிராம்
தயிர் – 1 கப்
சிகப்பு மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
நெய் – 150 கிராம்
இஞ்சி விழுது – 1 1/2 ஸ்பூன்
பூண்டு விழுது – 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை -1 கப்
புதினா – 1 1/2 கப்
ப. மிளகாய் – 5
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் – தேவையான அளவு
தனியா பொடி – 1 தேக்கரண்டி
கலர் பொடி – 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் – 1
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதங்கியதும் மீதமுள்ள வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
அடுத்து பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன், தயிர், தனியா பொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி, மீதி கொத்த மல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்தது எண்ணெய் பிரிந்து வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்க விடவும்
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி, உப்பு போடவும். அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டவும்.
அரிசியை போட்டு நன்றாக கிளரவும். அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்க வேண்டும்.