சமந்தா முத்தம் கொடுத்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.
ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன், தனது நெருங்கிய தோழியும் பேஷன் டிசைனருமான அதோடு ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஷில்பா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஷில்பா கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை சமந்தாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான், ஷில்பாவுக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை சமந்தா வெளியிட்டிருந்தர்.
சமீபத்தில் தானே சந்தித்துக்கொண்டார்கள்.. அதனால் அவருக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.