இந்தியாவின் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மாத்திரம் இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று மாத்திரம் 32,543 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் இன்று 45 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மாத்திரம் 694 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 2,236 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதன் மூலமாக கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 30,064 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply