பொதுவாக, நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறி வரும் நிலையில், அந்த கொடுமைகளில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்நிலையில், நபர் ஒருவர் தனது மனைவியை அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டில் ஒன்றில் இருக்கும் அந்த நபர், தனது மனைவியை காலின் அருகே பிடித்து வைத்து கொண்டு மிகவும் கொடூரமாக அவரது மனைவியை கண்முன் தெரியாமல் தாக்குகிறார்.

இதில் உச்சகட்ட அதிர்ச்சியாக அவர்களின் கைக்குழந்தை அவர்களின் பக்கத்திலேயே தரையில் படுத்து கிடந்தது அழுதுகொண்டே இருக்கிறது.

இறுதியில் மனைவி, தனது குழந்தையை கையில் எடுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின்னர் அந்த நபர் தனது மனைவியை எதுவோ சொல்லி மிரட்டுகிறார்.

இந்த வீடியோ, இணையத்தளங்களில் வெளியாக பலர் பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறை குறித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர், அந்த நபருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

 

 

Share.
Leave A Reply