கொரோனாவைக் கட்டுப்படுத்திய ஜேர்மனியில், இப்போது மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் North Rhine-Westphaliaவிலுள்ள Gütersloh மாகாணத்தில் சுமார் 360,000 பேர் வாழ்கிறார்கள்.
அங்குள்ள Tönnies என்னும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் 1,700க்கும் அதிகமான பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் புதன்கிழமை முதல், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இப்போதுதான் செயல்பட ஆரம்பித்த நிலையில், மீண்டும் அவை மூடப்பட்டுள்ளன.
மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள்.
வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்காகத்தான் இந்த ஊரடங்கு என உள்ளூர் சுகாதார்த்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், அது மக்களை கடும் கோபத்திலாழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா பரவலுக்கு காரணமான Tönnies இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான Clemens Tönnies இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் குரல் உயர்த்தியுள்ளனர்.