ஐக்கிய நாடுகளின் சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அதன் அதிகாரி உடலுறுவு வைத்துக் கொள்ளும் காணொளி வைரலாக பரவியதை அடுத்து, இது குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

இந்த சம்பவமானது இஸ்ரேலில் நடந்துள்ளது. அந்த காணொளியில், சிவப்பு நிற உடை அணிந்த ஒரு பெண், ஒரு ஆணின் மீது அமர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் டுஜாரிக், “நாம் எதற்காக பேசுகிறோமோ, எதற்காக பணியாற்றுகிறோமோ, அவை அனைத்திற்கும் எதிரானது இது போன்ற செயல்.” என்று கூறி உள்ளார்.

இருவர் சம்மதத்துடன் நடந்த உடலுறவா அல்லது பணம் பரிமாறப்பட்டதா? என்ற கேள்விக்கு, “இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று கூறினார்.

Share.
Leave A Reply