நாட்டில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் ஆவர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான, 383 பேர் நாடு முழுவதும் உள்ள 10 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 42 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 1,639 பேர் பூரணகுணமடைந்து வீடுதிரும்பியுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply