தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தியதால் கணவரின் முகநூலில் நுழைந்து ஆபாச படங்களை வெளியிட்ட மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மனைவியுடன் சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மோகன் ஜெய்கணேஷ், மீதிருந்த காதலில் அவர்களின் திருமண நாளின் போது திருமணத்தில் எடுத்த படங்களை முகநூலில் பதிவு செய்து வந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது மனைவி தாட்சாயினி அந்தப் படங்களை நீக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் நீ இப்பவும் என் மனைவி தான், உன்னுடன் இருக்கும் படத்தை எனது முகநூலில் பதிவு செய்வதில் என்ன பிரச்சனை எனக் கூறி இப்போதைக்கு என்னால் நீக்கமுடியாது என்றும் பதில் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாட்சாயினி, கணவன் முன்பு வைத்திருந்த பாஸ்வர்ட் இன்னும் ஆக்ட்டிவாக உள்ளதா…? என அறிந்து அதன் மூலம் அவரை பழிவாங்க எண்ணியுள்ளார்.

இதற்கு உதவுமாறு தனது கல்லூரி கால நண்பரான தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகரைச் சேர்ந்த 28 வயதான கிருபாகரனை உதவிக்கு அழைத்துள்ளார்.

தாட்சாயினி மற்றும் சிவாஜி ஆகியோர் சேர்ந்து பேராசிரியாரான மோகன் ஜெய்கணேசின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட முடிவு செய்துள்ளனர்.

மேலும் பல பெண்களின் ஆபாசப் படங்களை மார்பிங் செய்து தன் கணவர் ஜெய்கணேஷ் முகநூலில் பதிவேற்றியுள்ளார் தாட்சாயினி.

இதனை அறிந்த மோகன ஜெய்கணேஷ் அதிர்ச்சியடைந்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் இவ்வாறான செயலை செய்தது, தாட்சாயினியும், கிருபாகரனும் என தெரியவந்துள்ளது.

தற்போது தாட்சாயினி மற்றும் சிவாஜி மீது மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள தாட்சாயினியை போலீசார் தேடி வருகின்றனர்.

Share.
Leave A Reply