நட்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமது ஃபாரூக் பர்வினுக்குப் புனிதநீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்”

`உங்கள் மனைவியிடம் ஒரு சில பிரச்னைகள் இருக்கிறது அவருக்குப் புனித நீர் கொடுத்தால் எவ்விதப் பிரச்னைகளாக இருந்தாலும் தீர்ந்துவிடும்’ என்று, நண்பனின் மனைவியைத் தனி அறையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் மதபோதகர் ஒருவர்.

ஒரு கட்டத்தில் அவருடைய டார்ச்சர் தாங்கமுடியாமல் அந்தப் பெண், திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்லாம்

அஸ்லாம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசிப்பவர் முகமது ஃபாரூக். இவர் மதபோதகராக இருந்து வருகிறார்.

கே.கே நகரைச் சேர்ந்த பர்வீன் என்ற பெண், முகமது அஸ்லாம் என்பவரைக் காதலித்து 2008 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், முகமது பாரூக், அஸ்லாம் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதனைத் தொடர்ந்து அஸ்லாம், மத போதகரான முகமது ஃபாரூக்தான் என் வாழ்க்கையில் எல்லாம் என்று அவரது மனைவி பர்வீனிடம் சொல்லியிருக்கிறார்.

இந்த நட்பைப் பயன்படுத்திக்கொண்டு முகமது ஃபாரூக் பர்வினுக்குப் புனிதநீர் கொடுக்கிறேன் என்ற பெயரில் மயக்க மருந்து கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அவரிடமிருந்து 25 பவுன் நகைகளையும் பறித்துள்ளார். இதற்கு முகமது ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து பர்வீன் திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முகமது ஃபாரூக் மற்றும் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகமது ஃபாரூக்

முகமது ஃபாரூக்

அதைக் குடித்த அந்தப் பெண் மயங்கிய பின்னர் அவரைப் பாலியல் கொடுமை செய்ததுடன் அவர் வைத்திருந்த 25 பவுன் நகை மற்றும் பணம் ஒரு தொகையைத் திருடிச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்து எழுந்த பர்வீன் தனக்கு நேர்ந்ததை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்தி ஃபாரூக் பல வருடமாக நண்பரின் வீட்டிற்குச் செல்வது போல் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை போட்டோவும் எடுத்திருக்கிறார்.

இதனை அவர் கணவர் முகமது அஸ்லாமிடம் சொல்லிருக்கிறார். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் எங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரின் பேரில் மத போதகர் முகமது ஃபாரூக், அந்தப் பெண்ணின் கணவர் அஸ்லாமைக் கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விசாரணை முடிந்தபிறகுதான் முழு விவரமும் தெரியவரும்’’ என்று முடித்துக்கொண்டனர்.

Share.
Leave A Reply