கர்நாடகாவில் ஆடு வளர்ப்பவற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். தினந்தோறும் ஆடுகளை மேய்த்துவிட்டு வருவார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். அவர் வளர்த்த சில ஆடுகளும் உடல்நலம் சரியில்லாமல் காணப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் வளர்த்து வந்த 50 ஆடுகளையும் கிராம மக்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியதாக ஆய்வுகளில் குறிப்பிடும் அளவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.