ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் அமைந்துள்ள இந்த பாடல் தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் பார்வையற்ற சிறுமி சஹானா கீ-போர்டில் அந்த பாடலை வாசித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பலரும் பாராட்டை பெற்றதுடன் பகிரப்பட்டது.
நேற்று இரவு சஹானாவின் வீடியோவை பார்த்த ஏ.ஆர் ரஹ்மான் ட்விட்டரில் ஸ்வீட் என ரீ ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.
உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும் சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக வழங்கி மகிழ்வித்துள்ளார்.
பிறவியிலேயே கண்பார்வையற்றவரான சஹானா, ஸீ தமிழ் தொலைகாட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து இரண்டாம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sweet? https://t.co/0Llak3dNwQ
— A.R.Rahman (@arrahman) July 1, 2020