கருணாவை நாங்கள் தாய்லாந்திற்கு அனுப்பி அவர் புனர்வாழ்விற்குஉட்படுத்தினோம் அதன் பின்னரே அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தார் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

நாங்கள் கருணாவை பாங்கொங்கிற்கு அனுப்பி சீர்திருத்தினோம் அதன் பின்னரே அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகினார் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் அவரை அரசியல்வாதியாக்கவில்லை , தேசியப்பட்டியலை வழங்கி நாடாளுமன்றத்தில் அவருக்கு இடமளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களே கருணாவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தார்கள்,நாங்கள் அதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள அவர் கருணா தனது அறிக்கை குறித்து விளக்கமளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கருணாவை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை என்ற கேள்விக்கு அது நல்லாட்சி அரசாங்கமாக காணப்பட்டதால் அதனால் அது சாத்தியமாகவில்லை- ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் கருணாவ தெரிவித்ததன் அடிப்படையில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply