யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகத்திற்கு சென்ற யுவதியொருவருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு சென்ற யுவதி, கூக்குரலிட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தார்.
சாவகச்சேரியிலுள்ள ஐதேக அலுவலகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (3) நடந்தது.
சாவகச்சேரி நகரசபை உறுப்பினரும், ஐ.தே.க பிரமுகருமான சர்வா என்பவரின் அலுவலகத்திலேயே இந்த சம்பவம் நடந்தது. அவர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தேர்தல் பணிகளிற்காக இந்த யுவதியை இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
யுவதி காலையில் அங்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அலறியபடி அலுவலகத்திலிருந்து ஓடி வந்துள்ளார். இதனால் அங்கு மக்கள் குவிந்து பெரும் பரபரப்பான நிலைமை உருவாகியது.
அந்த யுவதிக்கு 17 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவதி முறையிடப்பட்டுள்ளது.