வவுனியா – கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தபணிகள் இல்லத்தினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில், விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்தபெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் ராயி செல்வராணி என்ற (17 – வயது) என்ற பெண்ணே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர் வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்றுவருவதுடன், இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply