வெள்ளவத்தையில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளவத்தை W.C சில்வா மாவத்தைக்கு அருகாமையிலுள்ள காலி வீதியிலுள்ள கட்டட தொகுதி ஒன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை ஸ்டேசன் வீதிக்கு அருகாமையிலுள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ அனர்த்தம் காரணமாக 5 கடைகள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடொன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply