யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து கைது செய்யப்பட்டவர் மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடியுள்ளார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுக்கு இன்று நண்பகல் சென்றுள்ளார். சந்தேக நபர் இந்தியாவிலும் சில மாதங்கள் இருந்துள்ளார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவர் சென்றதன் நோக்கம் தெரியவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்றும் பொலிஸார் கூறினர்.

Share.
Leave A Reply