யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
N.D.T என்ற அமைப்பினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பரவலாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.