பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அவரது தந்தை அமிதாப் பச்சனுக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, பச்சன் குடும்பத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் அவர்களுக்கு பி.சிஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஐஸ்வர்யாவின் மாமியும் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply