யாழ்ப்பாணத்தில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த இளைஞர் உயிரிழண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் சில காலத்தின் முன்னர் வவுனியா விடுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த யுவதியுடன் காதல் வசப்பட்டார்.

அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றையடுத்து இளைஞன் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் தொலைபேசியில் தினமும், திருமணம் செய்துமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை அடுத்தே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply