கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன.

கொரோனா தொற்றின் புதிய அறிகுறிகளாக முதுகுவலி, குமட்டல், சருமத்தில் தடிப்புகள் ஆகியவை கூறப்படுகின்றன. முன்னர் சளி, இருமல், காய்ந்நல் மட்டுமே கொரோனாவின் அறிகுறிகள் எனச் சொல்லப்பட்டன.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்த பிறகு புதிய புதிய அறிகுறிகள் ஏற்படத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாகத் தற்போது கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன.

இதனுடன் வயிற்றுப்போக்கும் இப்போதெல்லாம் கொரோனா அறிகுறியாகத் தென்படுகிறது. நீரிழிவுநோய் இல்லாதவர்களுக்குக்கூட கொரோனா தொற்றால் சர்க்கரையின் அளவானது 400-ஐ கடந்துவிடுகிறது.

இதையடுத்து அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) கொரோனா அறிகுறிகளாகப் புதிதாக மூன்றைச் சேர்த்து அறிவித்துள்ளது.

அவை முறையே மூக்கு ஒழுகுதல், குமட்டல் தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு. இதேபோல் ஐசிஎம்ஆர் அமைப்பும் வாசனை அல்லது சுவை தெரியாமல் இருப்பதையும் அறிகுறியாகச் சேர்த்துள்ளது.

பொதுவாக, கொரோனா அறிகுறிகளாகக் காய்ச்சல், சோர்வு, வறட்டு இருமல் ஆகியவை இருக்கும். இதனுடன் சில நோயாளிகளுக்கு உடல்வலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டைக் கரகரப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் அறிகுறிகளாகத் தென்படுகின்றன என்று ஐசிஎம்ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.

வயிற்றுப்போக்கு மற்றும் உடல்வலி ஆகிய அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் கொரோனா தொற்றைக் கண்டுபிடித்துள்ளோம். சாதாரண காய்ச்சல்கூட தற்போது கொரோனா தொற்றாக மாறிவிடுகிறது.

கிராண்ட் மெடிக்கல் காலேஜின் (Grand Medical College)மருத்துவர் ஹேமந்த் குப்தா கூறுகையில், ஹஹசர்க்கரை அளவு அதிகமாவது கூட கொரோனா தொற்றால் ஏற்படுகிறது.

இதனால் அதிக அளவிலான இன்சுலினையும் அவர்களுக்குச் செலுத்த வேண்டியதாக உள்ளது’ என்றார்.

Share.
Leave A Reply