உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும்.

இவ்வாறான தன்மையுடைய மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ”குா்குமின்” ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று சென்னை ஐ.ஐ.டி.யைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் குழு கண்டறிந்துள்ளது.

அந்த வகையில் மஞ்சள் மற்றும் ”குா்குமின்” கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி. உயிரிதொழில்நுட்பத்துறையைச் சோ்ந்த பேராசிரியா் ரமா சங்கா் வா்மா தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்துள்ளனா்.

மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ”குா்குமின்”, ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ”லுகிமியா” அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

Share.
Leave A Reply