போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான சிறைக் கைதியொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக குறித்த கைதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் உள்ள நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று செய்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிக்க முயன்றபோது, இவ்வாறு கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், 36 வயதுடைய வடக்கு கதுருவானா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.