சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் இன்று விளையாடச் சென்ற 7 வயது சிறுமி நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடலை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் டிரம்மில் சிறுமியின் உடல் இருந்ததால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.