யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையதில் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது இவ்வாறு 11 மாவட்டங்களுக்கு கொரோனா பரவியுள்ளது.
கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டது.
இதனை அடுத்து இலங்கையில் இதுவரை 16 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, புத்தளம், யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய 16 மாவட்டங்களிலேயே இவ்வாறு கொலிட்-19 தொற்று உறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.