பிரான்ஸைச் சேர்ந்த 65 வயதான (Francois Camille Abello) பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பல முறை சென்று வந்திருக்கிறார்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த பிராங்கோயிஸ் கமிலி அபல்லோவை, கடந்த 25/06/2020 அன்று அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவருடைய அறையில் இருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
பிராங்கோயிஸ் மடிக்கணினியில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் காணொளி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ் 305 இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் இருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.
சிறையில் ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிராங்கோயிஸ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிராங்கோயிஸ் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
அவர் கழுத்தில் கேபிள் ஒன்றை அழுத்திப் பிடித்து, மூச்சுத் திணறி உயிரிழக்கும் வகையில் முயன்றுள்ளார் என்றும், அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறையிலிருந்த அவரை காவல்துறை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து 3 நாட்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்து உள்ளார் என தெரியவந்துள்ளது.