ஒடிசாவின் பல்சோரி மாவட்டத்தில் அரியவகை மஞ்சள் நிற ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை மஞ்சள் நிற ஆமை

ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுதேவ் மகாபத்ரா. இவர் தனது தோட்டப்பகுதியில் நேற்று வேலைசெய்து கொண்டிருந்தார்.

அவர் வேலை செய்துகொண்டிருந்த பகுதியில் மஞ்சள் நிறமுடைய அரியவகை ஆமை ஒன்று இருந்ததை கண்டுபிடித்தார். வித்தியாசமான நிறத்தில் அந்த ஆமை இருந்ததால் பசுதேவ் அதை தனது வீட்டிற்கு கொண்டு வந்தார்.

சாதாரணமான ஆமையை விட இந்த ஆமை வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் அதை காண அப்பகுதியை சேர்ந்த மக்கள் பசுதேவின் வீட்டில் குவிந்தனர். மேலும், அவர்கள் அந்த அதிசய ஆமையை பார்வையிட்டு வியந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் பசுதேவின் வீட்டிற்கு சென்று மஞ்சள் நிற அதிசய ஆமையை கைப்பற்றினர். மேலும், இந்த ஆமை ‘அல்பினோ’ எனப்படும் அரியவகை ஆமை இனத்தை சேர்ந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசுதேவ் தனது தோட்டத்தில் கண்டுபிடித்த இந்த அரிய வகை ஆமையின் புகைப்படம், வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply