14 வயதான சிறுவன் ஒருவனுக்கு நிர்வாணப் படங்களை அனுப்பிய குற்றத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அழகுராணியான ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிஸ் கென்டகி அழகுராணி ரம்ஸி பியர்ஸ் எனும் 29 வயதான யுவதிக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றி வந்த காலப்பகுதியில் தனது மாணவனான 14 வயது சிறுவனுக்கு தனது நிர்வாணப்படங்களை அனுப்பினாரென ரம்ஸெய் பியர்ஸே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கென்டக்கி மாநில ரீதியான, மிஸ் கென்டக்கி 2014 அழகுராணியாக தெரிவானவர் ரம்ஸி பியர்ஸ். 2015 ஆம் ஆண்டு மிஸ் அமெரிக்கா அழகுராணி போட்டியிலும் இவர் பங்குபற்றினார்.

ஆசிரியையாக பணியாற்றிய ரம்ஸி பியர்ஸ், சிறுவர்களை பாலியல் நடத்தை ஈடுபடுத்துவதாக சித்தரிக்கும் பொருட்களை வைத்திருந்ததாக கடந்த டிசம்பரில் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், தீர்ப்பு அறிவிப்பது தொடர்பான நீண்ட விசாரணையையடுத்து அவருக்கு கனவ்ஹா நீதிமன்றினால் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் தனது மகனிடமிருந்து சில படங்களை மேற்படி மாணவனின் தாய் கண்டுபிடித்ததையடுத்து அது தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து ரம்ஸி பியர்ஸ் கைது செய்யப்பட்டார்.

 

அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த அதேவேளை, விசாரணைகள் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் அவர் ஆசிரியர் பணியிலிருந்தும் நீக்கப்பட்டார். 

சந்தேகநபரான ஆசிரியை மேலாடை அணியாத குறைந்தது 4 படங்களையாவது மாணவனுக்கு ரம்ஸி பியர்ஸ் அனுப்பியுள்ளமை கண்டறியப்பட்டது.

பொலிஸ் முறைப்பாடுகளுக்கமைய, ஸ்னெப்செட் மூலம் 2018 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நிர்வாணப் படங்களை அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது மகன் குறித்த ஆசிரியையின் வகுப்பை சேர்ந்தவர் அல்லவென்றும், ஆசிரியையுடன் அவனுக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்று வினவியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் நீதிமன்றில் கூறினார்.

ரம்ஸி பியர்ஸ் தன்மீதான குற்றச்சாட்டை அரைமனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும், பொலிஸ் விசாரணைகளையடுத்தே அவர் தொடர்புகளை நிறுத்தியதாகவும் தாய் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பியர்ஸின் சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் பாலியல் குற்றவாளிகளின் பட்டியலில் நிரந்தரமாக வைக்கப்பட்டதால் அவர் ஏற்கனவே ஒரு ஆயுள் தண்டனையை அனுபவித்துள்ளார் எனக் கூறினார்.

குறித்த மாணவனுடன் எவ்வித உடல் ரீதியான பாலியல் தொடர்புகளையும் பியார்ஸே கொண்டிருக்கவில்லை என அவர் வாதிட்டார்.

எனினும் ரம்ஸி பியர்ஸுக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Share.
Leave A Reply