பூசா சிறைச்சாலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளஉலக குற்றவாளிகள் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட யாரை வேண்டுமானாலும் கொலை செய்வதற்கான திறன் தங்களுக்குள்ளது என தெரிவித்தமை குறித்த சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எங்களிடம் துப்பாக்கிகள் உள்ளனர் எங்கள் ஆட்க்கள் வெளியில் உள்ளனர் எங்களை சிறையில் வைத்திருப்பதை தவிர வேறு எதனையும் உங்களால் செய்ய முடியாது என முக்கிய குற்றவாளிகள் சிலர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் உங்கள் அனைவரையும் கொலை செய்வோம், சிறைச்சாலை தலைவர், பாதுகாப்பு செயலாளர் ஏன் தேவைப்பட்டால் ஜனாதிபதியை கூட கொலை செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் பதவி எங்களுக்கு ஒன்றும் முக்கியமானதல்ல அவர் ஐந்து வருடங்களே பதவியிலிருப்பார் என முக்கிய குற்றவாளிகள் சிலர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
கொஸ்கொட தாரக என்ற பாதாளஉலககுற்றவாளியும்,திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களை சேர்ந்தவர்களும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் சிறைச்சாலை புலனாய்வு பிரிவின் தலைவர் ஆகியோர்ன் வாக்குமூலங்களை சிஐடியினர் நேற்று பதிவு செய்துள்ளனர்.
குறிப்பிட்ட குற்றவாளிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை அவர்களை பார்வையிடுவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் சென்றவேளை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகள் இது குறித்து பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.