யாழ்ப்பாணம் , மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 1.45 அளவில் இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேர், வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply