இந்தியா: டெல்லியில் 4 வயது சிறுமியைக் கடத்த முயன்றவர்களைத் தாய் மற்றும் அயலவர்கள் இணைந்து திரைப்படப் பாணியில் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஷகர்பூரில் இருவர் தங்களை சேல்ஸ்மேன் என அடையாளப்படுத்தி அப்பகுதியிலுள்ள வீடடொன்றில் உள்ள பெண்ணிடம் அருந்த தண்ணீர் கேட்டுள்ளனர்.

 

இதையடுத்து குறித்த பெண் உள்ளே சென்றதும், வாசலில் இருந்த சிறுமியை அவர்கள் கடத்த முயன்றுள்ளனர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஓடிவந்த பெண், கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளைக் கீழே தள்ளி தனது குழந்தையை அவர்களிடமிருந்து மீட்டுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, இந்த சம்பவத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஒருவர், அருகே இருந்த மோட்டார் சைக்கிளை வீதியின் நடுவே நிறுத்தி கடத்தல்காரர்கள் வந்த மோட்டார் சைக்கிளை கீழே தள்ளியுள்ளார்.

 

எனினும் கடத்தல் காரர்கள் அவரை தள்ளிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதுடன் விசாரணையில் சிறுமியின் தாய் மாமனே பணத்திற்காகக் குழந்தையைக் கடத்த முயன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply