நடிகை வனிதா , பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்
அதன் பிறகு தான் பிரச்சனையே, எங்கு திரும்பினாலும் இவரின் குடும்ப பஞ்சாயத்து தான் பெரியளவில் பேசப்பட்டது.
தற்போது கூட லட்சுமி ராமகிருஷ்ணனை யூடியூபில் வனிதா செம்ம ரெய்ட் விட்டார்.
பிறகு இன்று கஸ்தூரியையும் அவர் விட்டு வைக்கவில்லை.
இதை தொடர்ந்து டுவிட்டரிலும் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் சண்டை தொடங்கியது.
ஊரே இவர்கள் சண்டையை சுற்றி பார்க்க, தற்போது வனிதா டுவிட்டரை டீ ஆக்டிவேட் செய்துள்ளார்.
இது ரசிகர்களுக்கு வருத்ததை அளித்துள்ளது.
அதோடு தனக்கு நிறைய போலி அக்கவுண்டில் இருந்து நெகட்டிவ் கமெண்ட்ஸ் நிறைய வருவதால் அதிலிருந்து வெளியே வருவதாக கூறியுள்ளார்.
மேலும், தஞ்சாவூரில் உள்ள பாதி பேர் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்கள் தான் என்று வனிதா பேசியுள்ளார்.
இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா ஜ க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.