புத்தளம் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
குறித்த சந்தேக நபர் கடந்த 15 ஆம் திகதி புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரிகம பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவரைபாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பில் தேடப்பட்டுவருபவராவார்.
ஆசிரிகம, பகுதியை சேர்ந்த, லொக்கு முதியன்சலாகே சிம்யோன் எலோசியஸ், (அடையாள அட்டை இலக்கம், 791975050V) என்பவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.
இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 119 என்ற அவசர இலக்கம் மற்றும் 071– 8591292, 032– 2265222, 032- 2265422 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிக்கும்படி பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.