வறுமை காரணமாக புலம்பெயர் தொழிலாளி ஓருவர் பச்சிளம் குழந்தையை ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் ஒரு வனப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர் தீபக் பிரம்மா. இவர், ஊரடங்குக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ஊரடங்கைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு உறவினர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

எவ்வளவோ முயன்றும் வேலை கிடைக்கவில்லை. வறுமையால் அவதிப்பட்டார். இதற்கிடையே, கடந்த மாதம் அவருடைய மனைவி 2-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால், செலவு மேலும் அதிகரித்ததால், அந்த பச்சிளம் குழந்தையை 2 பெண்களிடம் ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். இதை அறிந்த அவருடைய மனைவியும், உறவினர்களும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டனர்.

தீபக் பிரம்மாவையும், குழந்தையை வாங்கிய 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

Share.
Leave A Reply