அமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிலிக்கன் இறப்பரிலான முகக்கவசம் தொற்றுநீக்கக்கூடியதுமாகும்.

இதனை அணிவதற்கு மிகவும் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான விலை 15  டொலர்களாக இருக்குமென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த முகக்கவசத்தை வைத்தியசாலைக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்காவில் உணவு மற்றும் மருத்துவ நிறுவத்தின் அனுமதியை கோரியுள்ளது.

எனினும், குறித்த  முகக்கவசம் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தொடர்பில் குறப்பிடவில்லை.

இதுவரை அமெரிக்காவில் 140 மில்லியன் பேர் என்95 முகக்கவசத்தை அணிவதாக தெரிகின்றது.

மேலும் இந்த என்95 முகக்கவசம் கடினமாக இருப்பதால் ஒருசிலர் அசௌகரித்துக்கும் உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உலக நாடுகளின் பலவற்றில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பதையடுத்து அனைரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும். ஒருசிலர் இதனை பயன்படுத்திவிட்டு முறையற்ற விதத்தில் ஆங்காங்கே வீசிவிடுவதால் பறவைகள் போன்ற சிறிய உயிரினங்கள் இவற்றில் சிக்குண்டு உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே குறித்த விஞ்ஞாம் தொழில்நுட்ப நிறுவனம், பாவனைக்கு இலகுவானதும் மீள பயன்படுத்தக்கூடியதுமான இந்த சிலிக்கன் முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply