பீகாரில் வெள்ளம் காரணமாக மீட்பு படகில் பிரசவித்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வசிக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைப்போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் கிழக்கு சாம்ரன் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து 25 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மீட்புக்குழுவினர் முயற்சி மேற்கொண்டனர்.

அந்த பெண்ணை மீட்பு படகில் அமரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வெள்ளம் சூழ்ந்த நடு வழியில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

இதையடுத்து மீட்பு படகிலேயே அந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அப்பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணும் அவரது குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயையும், குழந்தையையும் நலமுடம் இருப்பதாக தெரிவித்தனர்.

Share.
Leave A Reply