இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிட்ட புதிய அறிவிப்பின் ஊடாக இந்த விபரம் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தரம் முதல் 13ஆம் வகுப்பு வரை முழுமையாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் திறக்கும் முறை தொடர்பில் தெளிவுப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளிக்கமைய வகுப்பறைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்குள் மாணவர்களின் சுகாதாரம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை திறப்பதற்கான முதல் கட்டமாக நாளை முதல் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் சுகாதார முறையின் கீழ் ஆரம்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Share.
Leave A Reply