சீனாவில் 61 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது ஏப்ரல் மாதத்திலிருந்து பதிவான தொற்றாளர்களில் மிக அதிகமான தொகையாகும்.

இது மூன்று தனித்தனி பிராந்தியங்களில் கொரோனா கொத்தணி நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.

அவை புதிய அலை பற்றிய கொரோனா அச்சத்தைத் தூண்டின.

சீனாவில் இதுவரை 83,800 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 4,600 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

3.5 மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகை கொண்ட சின்ஜுயாங் நகரத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மேலும் 302 கொரோனா அறிகுறி தொற்றாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் 331 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

21 பேர் கடுமையான நிலையில் உள்ளனர்.

Share.
Leave A Reply