திருகோணமலை தம்பலாகாமம் பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
யூனிட் 08,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தனது சகோதரரின் மனைவியின் தங்கையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.
சிறுமி பெற்றோருடன் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் வைத்தியர்களினால் பரிசோதனைக்குட்படுத்திய போதே ஒரு மாதம் கர்ப்பிணியாகிவுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.