மஞ்சள் நிறமான அரிய வகை ஆமையயொன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒடீஸா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்திலுள்ள சுஜான்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அண்மையில் இந்த ஆமையை மீட்டுள்ளனர்.
அதன்பின் இந்திய வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா இந்த ஆமையின் படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
வனஜீவராசிகள் துறை அதிகாரியான பானுமித்ரா ஆச்சார்யா இது தொடர்பாக கூறுகையில், “இந்த ஆமையின் நிறம் மிக அரியது. இதன் ஓடுமு மற்றும் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக காணப்படுகின்றன. இது போன்ற ஒரு ஆமையை நான் இதற்குமுன் கண்டதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.