கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண இளைஞன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நெடுங்குளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே, நேற்றையதினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கந்தக்காட்டில் இருப்பவர்களை பெற்றோர்கள் பார்ப்பது சில வாரங்களிற்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்ததால், அண்மைநாட்களில் அவரை பார்வையிட யாரும் சென்றிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பிரதேசவாசிகள் யாரும் அச்சமடைய தேவையில்லயெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply