இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி ஒருவர் எருதுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களயும் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

இதனை பார்த்த பிரபல பொலிவூட் நடிகர் சோனு சூட், அவ் விவசாயிக்கு புதிய உழவு இயந்திரமொன்றை வழங்கியுள்ளார்.

மதனபள்ளி, ராஜுவரிபல்லே கிராமத்தை சேர்ந்த விவசாயியான  நாகேஸ்வரராவுக்கு வெண்ணிலா மற்றும் சந்தனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

மதனபள்ளியில் கடந்த 17 வருடங்களாக தேநீர் கடை நடத்திவந்த நாகேஸ்வரராவ், கொரோனா ஊரடங்கு காரணமாக கடையை மூடிவிட்டு வேறு வழி இல்லாததால் விவசாயம் செய்யும் நோக்கில் குடும்பத்துடன் சொந்த கிராமத்துக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சொந்த ஊரில் தனது நிலத்தில் தக்காளி பயிரிட, நிலத்தை உழுது பக்குவம் செய்வதற்கு எருதுகள் அல்லது உழவு இயந்திரம் ஒன்றை வாடகைக்கு பெற முயன்றுள்ளார்.

எனினும், உழவு இயந்திரத்துக்கு ஒரு மணித்தியாலத்துக்கு 1,500 இந்திய  ரூபாவும் எருதுகளுக்கு நாளொன்றுக்கு 2,000 ரூபாவையும் வாடகையாக கோரியுள்ளனர்.

 

எனினும் வாடகை செலுத்த  தனக்கு பண வசதி இல்லாததனால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை கொண்டு நிலத்தினை உழத் தொடங்கியுள்ளார்.

தனது 2 ஏக்கர் நிலத்தில் நாளொன்றில் தனது மகள்களைக் கொண்டு 0.75 ஏக்கர் நிலத்தை நாகேஸ்வரராவ் உழுததுடன் அவரது மனைவி நெல்லை விதைத்துள்ளார்.

 

ட்விட்டரில் கடந்த ஞாயிற்று கிழமை இரண்டு பெண்கள் ஏர் கலப்பை கொண்டு நிலத்தினை உழும் வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் அதனை ரீட்வீட் செய்து, ”இந்த குடும்பத்துக்கு மாடுகள் கூட இல்லை. எனவே உங்களுக்கு ஒரு உழவு இயந்திரம் வாங்கித்தர வேண்டும்.

 

சோனு சூட் வழங்கிய ட்ரக்டருடன் மனைவி, மகள்களுடன் விவசாயி  நாகேஸ்வர ராவ்

……………………………………………………………………………………………………………………………………………………………………………………..

இன்று மாலைக்குள் உழவு இயந்திரம் உங்கள் நிலத்தினை உழும், மகள்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என கூறினார்.

அதன்படி அவர்களுக்கு உழவு இயந்திரமும் அனுப்பியுள்ளார்.  இதனை தொடர்ந்து, ஆந்திர  மாநில முன்னாள்  முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட பலரும் சோனு சூட் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply