இந்தியாவிலுள்ள கிராமம் ஒன்றில், நபரொருவருடன் திருமணத்துக்கு அப்பாலான உறவினை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவருக்கு, அவரது கணவனை தோளில் சுமந்து பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக செல்ல வற்புறுத்தி கிராமத்தவர்கள் தண்டனை அளித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்திலுள்ள சப்ரி ரன்வால் என்ற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

 

கணவனை சுமந்து செல்லும் பழங்குடி இனத்தவரான இப்பெண் துன்புறுத்தப்படுவதைள காட்டும் வீடியோ வைரலாகிவருவதுடன், 21 ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய கொடூர தண்டனை அளிக்கப்படுதற்கு எதிராக பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்பெண் தனது கணவனை சுமந்து நடத்து செல்வதை அங்கிருக்கும் சிறுவர் முதல் அனைவரும் ஏளனமாக பார்த்து சிரிப்பதுடன், தொடர்ந்தும் நடந்துசெல்லுமாறு அப்பெண் தடிகொண்டு தாக்கப்படுகின்றமை அவ்வீடியோ மூலம் தெரியவருகிறது.

இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸார் அப்பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களாக தனது கணவனுடன் இப்பெண் குஜராத்துக்கு சென்று அண்மையில் தமது சொந்த கிராமத்துக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், வேலைத்தளத்தில் பணியாற்றிய நபரொருவருடன் தொடர்பினை பேணியதாக அப்பெண் மீது அவர் கணவர் குற்றஞ்சாட்டியதுடன், கிராமத்தவர்களுடன் இணைந்து அவரை தண்டித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் அம்மாவட்டத்தில் இது புதிதல்ல. அவர்கள் எழுதப்படாத கொடூரதண்டனைகளை கையாண்டுவருகின்றனர்.

தமது வாக்குவங்கி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் மக்கள் பிரதிநிதிகளும் இவற்றை தட்டிக்கேட்க அஞ்சுவதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

 

Share.
Leave A Reply